Wednesday, June 21, 2006

பூக்களின் காதலன்

பூக்களை நேசிக்கும் நான், 
நித்தம் தரிசிப்பேன் கோடானு கோடி காதலிகளை! 
எனக்கு சிறகுகள் வாய்த்ததே, 
அதற்குத்தான் என்பேன். 
அவர்களை சுற்றி சுற்றி வருவேன்.
பாசமாய் வருடிச் செல்வேன். 
ஒருத்தியிடம் கூட சொன்னதில்லை, 
நான் நேசித்த சங்கதியினை. 
நிராகரிப்பை நிராகரிப்பவன் நான். 
ஒருவேளை என்னை நிராகரித்தால்,
நிராயுதபாணி ஆவேனல்லவா? 
நிறங்களை சுமக்கும் தேவதைகள், 
என் அருமை காதலியர். 
நிறமில்லாத நான் எப்படி உரைப்பேன்?
என் வானவில் காதலை?
ஒற்றைக் காலிலாவது நிற்கின்றனர், 
என் அழகு நாயகியர். 
நில்லாதவன் நான் என்பதால்- 
காதலை சொல்லாதவன் என ஆனேன். 
ஒவ்வொருத்தியிடமும் தனித்துவமாய், 
ஒவ்வொரு ஸ்வாசம், ஒவ்வொரு வாசம்! 
என் ஸ்வாசத்தில் ஏற்றிச்செல்வேன், 
என்னவள்களின் பூ வாசம். 
மெல்லியலாள் என மனதில் கொஞ்சுவேன்! 
மெல்லிசை காதினில் ஓதுவேன்! 
சில சமயம் வல்லியனாகி, 
அவர்களை ஆட்டிப்படைப்பேன். 
பின் அதற்காக அழுது வருந்துவேன்.
என்னை புயலாய்ப் பார்க்க, 
எனக்கே பிடிப்பதில்லை. 
ஏனென்றால் நான் பூங்காற்று. 
பூக்களின் காதலன்!

Wednesday, June 07, 2006

Nostalgia

To my poem "Pidiththavai", I received a humorous comment asking me when I will become mad..or when I start liking madness (Eppo ungalukku paithiyam pidikkum)...Mused on this very topic for some time and wrote the following... Ha Ha Ha... To tell the world that I am already having a likingness towards madness...Yeah Shakespeare himself declares that "There is a method in the madness".In that way, everyone is mad about something or other..Iam mad of the pastness of the past.

Nostalgia
I am from a city named Nostalgia.
Here houses were built with bubbles of thoughts. 
Countless windows carry yesterday's flavor.
Curtains swing with aesthetic air... 
Trees, Birds, Clouds, and stars... 
Thorns, Bushes, Tears, and ashes... 
All sing an eternal song upon pastness of the past... 
Roads run backward... 
Drenched with dried rain...
So the minds run ...
Dwellers of this city dwell in dreams... 
Passing days pass each a dream... 
History is the subject that we read.
People here sow their dreams 
And reap them today or tomorrow... 
Bidding bye to sorrow... 
And I am proud of being nostalgic...
Please never call it a sickness.
I'm fond of that stiffness.

Thursday, June 01, 2006

பிடித்தவை

பிடித்தவை எனப் பல..
நினைவிற்கு வந்தவை சில..
நாம் அறியாமற் கடந்து சென்ற காலம்,
உண்மையைத் தொடும் கற்பனை!
எனவே கடந்த காலம் பிடிக்கும்.
நாம் அறியா வருங்காலம்,
பொய்மையை தொடும் கற்பனை!
எனவே வருங்காலம் பிடிக்கும்.
உயிரோட்டமுள்ள கவிதை என்பதாலும்,
கற்பனையற்ற நிஜம் என்பதாலும்,
நிகழ்காலம் மிகவும் பிடிக்கும்.
முக்காலத்திலும் பிடித்தவை சில..
அப்பாவின் தோழமை பிடிக்கும்!
அம்மாவின் அருகாமை பிடிக்கும்!
பிஞ்சு மேகம் பிடிக்கும்.
உதிர்கின்ற பஞ்சு தூறல் பிடிக்கும்.
மழையினூடே சூடான சுவை ஏதேனும் பிடிக்கும்!
பச்சை நிறம் பிடிக்கும்.
பாகற்காய் மிகப்பிடிக்கும்!
முட்கள் மிகப்பிடிக்கும்.
அவை குத்தி ஏற்படும் வலி பிடிக்கும்.
மெல்லிய புல் பிடிக்கும்,
முரட்டுப் பாறை பிடிக்கும்.
மான் பிடிக்கும், மயில் பிடிக்கும்.
குயிலிசை மிகப்பிடிக்கும்!
என்னை சேர்த்துக்கொள்ளாவிட்டலும்,
அணிலின் விளையாட்டு பிடிக்கும்!
பழமையான கோவில்கள் பிடிக்கும்.
சிற்பிகளின் அழகு பதிந்த சிற்பம் பிடிக்கும்!
மின்சாரமில்லா இருள் பொழுதில்,
அருள் புரியும் சிறு தீபம் பிடிக்கும்!
வழியறியா காடுகளும்,
எண்ணற்ற நட்சத்திரங்களும் பிடிக்கும்.
தூசுகளை பரிட்சயப்படுத்தும்,
ஜன்னல் வழி வெய்யில் பிடிக்கும்!
எப்பொழுதோ வாங்காமல் விட்டு,
இப்பொழுதும் இனிக்கும் குச்சி ஐஸ் மிகப்பிடிக்கும்!
தடாகம் முழுதும் தாமரை பிடிக்கும்,
தாகம் தீர்க்கும் தண்ணீர் மிகப்பிடிக்கும்.
என் அன்புக்குரியவர்களை மிகப்பிடிக்கும்!
என்னையே எனக்கு மிக மிகப் பிடிக்கும்!