அம்மாவாசையாய் இருண்டு கிடந்த
என் மனதில்,
குடிபுகுந்தாள் என்னவள்!
பிறைநிலா புன்னகை சிந்தி,
நம்பிக்கை நட்சத்திரத்தை,
என்னுள் விதைத்து,
என் வாழ்வை வளர்பிறையாக்கி,
முழுநிலவாய் கலந்துவிட்டாள்,
என் ஜீவனில்!
அவள்- என் கனவுப்பெண்
களங்கமில்லா நிலவு அவள் மனது!
பசுமை மாறா நிலம் அவள் நினைவு!
திகட்டா இனிமை அவள் சொல்!
தடையில்லா வளர்ச்சி அவள் கலை!
வறுமை
உன் வெண்டை விரல்களுக்கு,
மோதிரமும் வேண்டுமோ?
உன் வெள்ளை கால்களுக்கு,
வெள்ளி கொலுசும் வேண்டுமோ?
உன் புன்னகையே போதும்,
பொன்னகை எதற்கடி?
என தன்னை தானே,
தேற்றிக்கொண்டான்,
வறுமையில் வாடும் தந்தை...