Wednesday, December 27, 2006

மௌனப்பதிவுகள்- I

ஆயிரம் கலைகள் பேசும்,
காலத்தால் அழியா சிலைகள்;
தெள்ளிய வானிலே,
நொடிக்கொரு முறை,
தன்னுருவை மாற்றி,
வாழ்க்கை பாடம் கற்பிக்கும்,
மேதை மேகங்கள்;
தன்னை தானறிய,
எத்தனிக்கும் மௌனிகள்;
என நினைத்துப் பார்க்கையில்,
இரைச்சலுக்கிடையில்,
இன்பமாய் உறங்கிக் கொண்டிருக்கும்,
மலர்க் குழந்தையும், கொடித் தாயும்,
மௌனப் பதிவுகள் தாம்.