Tuesday, January 09, 2007

ஏதாவதொன்று

வீடுகள் வீதிகளில்
வீதிகள் ஊர்களில்
ஊர்கள் நாடுகளில்
நாடுகள் கண்டங்களில்
கண்டங்கள் உலகில்.

அத்தனையும் அடக்கம்,
ஏதாவதொன்றில்.

எழுத்துக்கள் வார்த்தைகளில்
வார்த்தைகள் வாக்கியங்களில்
வாக்கியங்கள் மொழிகளில்.

வெங்காயத்தோல் போல,
உரிக்க உரிக்க உரிக்க,
வந்துகொண்டேதான் இருக்கிறது,
ஏதாவதொன்று ஏதாவதொன்றிலிருந்து.

மாடுகள் அசை போடுவதைப்போல,
மனமும் அசை போடுகிறது
எப்பொழுதும் ஏதாவதொன்றை...

Wednesday, January 03, 2007

மௌனப்பதிவுகள்-II