Monday, December 06, 2010

வியாபாரம்

பண்டமாற்று...
 பொருள் கொடுத்து பொருள் வாங்குதல்... 
நயத்தக்க நாகரீகமாய் இருந்தது... 
வியாபாரத்தில் மனிதர்க்கு முதலிடம்... 
பொருளீட்ட நானயம் உதவியது.... 
 பணமாற்று... 
பணம் கொடுத்து பொருள் வாங்குதல்... 
நகைக்கத்தக்க நாகரிகமாய் இருந்தது... 
வியாபாரத்தில் பணத்திற்கு முதலிடம்... 
பொருளீட்ட நாணயங்கள் மட்டும் உதவுகின்றது...
  இங்கே கல்வியும், சாராயமும், பணம் கொழிக்கும் வியாபாரம்.... 
அரசியல் சிறந்த வியாபாரம்... 
அனைத்தும் வியாபாரம்... 
உலகமயமாதலில் தொலைந்து, 
தொலைவில் தெரிகின்ற கானல் நீராகி, 
கரைகின்றது உள்ளத்து சிந்தனைகளும்,
வேருக்கு நீராகாத மழை மேகத்தை போல...

வேடந்தாங்கல்

வானம்பாடியின் சுதந்திரத்தை கொடு... 
நம் வாழ்வாகும் இணைபிரியாத அன்றில்களைப் போல... 
அன்னப்பறவை போல என் குறைகளை விடுத்து,
நிறைகளை பார், நம் வாழ்வாகும் தென்றல் தீண்டும் வசந்தமாய் !
காக்கை பகிர்ந்துண்ணுவதை போல , 
நீயும் பகிர்ந்து கொள் உன் எண்ணங்களை.... 
பின் எல்லையில்லை நம் மகிழ்ச்சிக்கு! 
குயிலை போல உற்சாக குரல் கொடுப்பாய்,
நான் சோர்வுற்று அமரும் பொழுது...
பின் நித்தம் பொழியும் இன்பமென்னும் மழை! 
புறாவை போல சமாதனம் செய் நான் சண்டையிடும் பொழுது ....
சக்கரவாகம் அமுத மழை அருந்துவதை போல, 
நீயும் அருந்துவாய் என் அன்பு கலந்த தேநீரை... 
நம் வாழ்வாகும், வேடர்களற்ற , வேடங்களற்ற வேடந்தாங்கல் !