பூஞ்சிட்டு :
இவள் எங்கள் பூஞ்சிட்டு !பார்த்தால் பால் மொட்டு !
பேசினால் தேன் சிட்டு!
இவள் எங்கள் அமுதசுரபி !
அன்பு சுரக்கும் தேனருவி...
சிரித்து மயக்கும் பூங்குருவி ...
இவள் பிரிக்க பிரியா பிரியத்தாள் ...
உரிக்க உரியா உறவுத்தாள் ...
இவள் எங்கள் வாழ்வின் வேர்!
எங்கள் பூக்களுக்கு நீர்!
இவள் பெயர் நியந்த்ரி...
சிவா- காயத்ரியின் புத்திரி!
வானம்பாடியின் வம்சம் வந்தவள் !
வாழையடி வாழையாய் வாழ பிறந்தவள் !!
அனைவரையும் அன்பால் ஆள பிறந்தவள்!!!