சேலத்து மாங்கனியாய் ,
தித்திக்கும் இவள் பெயர்!
பழமையான இந்தியப் பூர்வக்குடியின்,
புதுமையான அமெரிக்கப் பேத்தி!
வெள்ளை சிரிப்பிலிவள்,
கொள்ளை அழகு!
இல்லத்தின் தலைமகளாம்!
கலைமகளின் செல்லமகளாம்!
நுனிநாக்கு ஆங்கிலத்துடன்,
தாய் மொழியாம் சௌராஷ்டிரமும்,
தமிழும், பிற மொழிகளும்,
பழகும் இனிய தேன்மொழியாம்!
அன்னையிடமிருந்து இவளுக்கு வாய்த்தது,
வாய்ப்பாட்டும், இனிய பேச்சும் மற்றும்
வாசிக்கும் பழக்கமும்!
தந்தை இவளுக்கு அளித்ததோ ,
அரவணைக்கும் குணமும் ,
சபையில் முன் நிற்கும் பண்பும்!
அம்மாவுக்கு பிடித்த உணவு சமைத்து,
ஆச்சரியப்படுத்தும் குட்டி இன்சுவையரசி!
விசாலமான அறிவினைக் கொண்டு,
நாளைய உலகின் தாழ் திறந்திடும்,
எங்கள் வீட்டின் இளவரசி!
குட்டி தங்கைகளுக்கும், தம்பிகளுக்கும்,
கைபிடித்து வழிநடத்தும்,
அன்பிற்கினிய இனியா அக்கா!