Friday, February 10, 2006

World

If we ask the world's view about "the world", each will have his own perception. According to Robert Frost, "Earth is the right place for Love".To Shakespeare, "World is nothing but a Stage".Emerson says, "I know that the world I converse within the city and in the farms, is not the world I think".Like this, each has in them their own world. Here in the poem below, I have picturized my world. 

என்  உலகம் : 

கான்க்ரீட்  தரைகள்,
அதனை அழகுபடுத்த, 
போன்சாய்  மரங்கள்...
தொலைபேசியில் தொலைக்கும், 
விலைமதிப்பற்ற நேரங்கள் .
தொலைக்காட்சியின் காட்சிகளில்,
 நாம் இழக்கும் நமக்கே உரிய மௌனங்கள்...
கணினி வலையில் சிக்கி,
கசங்கி போகும் கண்கள்...
வான் முட்டும் பிளாட்டின்,
ஜன்னல் கானா நட்சத்திரங்கள்...
இதுவல்ல என் உலகம்...
என் உலகம் சலனமற்றது.
இதில் கேட்கலாம்,
குயில்களின் உற்சாக குரல்களை!
இதில் பார்க்கலாம்,
எழில் மிகுந்த அணில்களையும்,
வழி நெடுக மரங்களையும்!
சூரியனின் உதயத்தை ரசித்தபடி,
தேநீர் அருந்தும், அழகிய விடியல்களும்,
மதி மயக்கும்  மதியின் மாலை பொழுதுகளும்,
காலையும், மாலையும் தென்னங்கீற்றுகளால் ,
வருடிச்செல்லும் காற்றும்,
எனக்கு சொந்தமானவை!
சிருங்கார பொழுதுகளில்,
இயற்கையின் இசையில்,
பழகிய  புத்தகங்களின் ,
வேர் முதல் விழுதுகள் வரை,
தேடித்  தேடிப்  பூப்பறிப்பதே  என் பொழுதுப்போக்கு.

2 comments:

Anonymous said...

Very nice to see your view about tha World. I can imagine how much you are involving in your world.

Sangi.

Gayathri Chandrashekar said...

Sangi you are welcome to my Ideal world!