சுவடுகள்
இருண்ட வானம்,
நாளைய விடிவை நோக்கி.
வறண்ட பூமி,
மழை மேகத்தை நோக்கி.
அரண்ட மனிதன்,
பிறர் கால்சுவடை நோக்கி.
மழை
மேகப்பிள்ளைகள் ஒன்றை ஒன்று,
முட்டிக்கொண்டு சண்டையிட,
வானத்தாயின் மனதிலே
மிகப்பெரிய இடி.
மின்னல் வேகத்தில்,
அவள் கண்களிலிருந்து பொழிகின்றது,
கங்கையென பெருமழை.
ஜோதி
கால நதியின் ஓடங்களானோம்.
மனித்துளிகள் ஓட ஓட,
உயிர்த்துளிகளும் மெழுகென உருகுகின்றது.
சிறு உயிர்களை தன்பால் ஈர்த்து,
மாயமாய் மாய்க்கும் மெழுகாக அல்லாமல்,
பல உயிர்கட்கு ஒளி தருகின்ற,
திவ்ய ஜோதியாய்,
வாழ்க்கைக் கடலில்,
கலந்து, உயிர்த்து, கரைவோம்.
9 comments:
Kalandu,uyirthu, karaivom..
nanraaga ezuthivuLLeergaL..
தஙகளுடைய வலைப்பதிவை முதல் முறை வலம் வந்தென்
மழை கவிதை நன்றாக உள்ளது ! !
வாழ்த்துக்கள் ! ! !
எனது வலைப்பதிவிற்கு வருகை தந்ததற்கு நன்றி."யதி" என்பதன் அர்த்தம் என்ன?
Thank you anaymous!
//வாழ்க்கைக் கடலில்,
//கலந்து, உயிர்த்து, கரைவோம்.
kalandhu karaai yeruvom'nu irundha jothioda artham positive irundhirukum enbathu...en manam sollum karuthu
Jyothi - precisely conveyed...
Hi Karthik,
Here I have compared human like to Jothi.vaazhkkayai kadalaai uruvagappaduththirken..Appo oru naal karaindhu dhaane poganum..My optimistic thought is Do good like a divine lamp...till the end.
good thinking...By the way the spelling for my name is KARTHIcK...i AM THICK,,,,HEHEH
மழை அருமையாக பெய்திருக்கிறது. தொடரட்டும்
@sivakumar,
Thanks for yr comments
Post a Comment