Sunday, February 25, 2007

நிலாக்காதலி

நிலாப் பொழுதுகள்,
நிசப்தத்தின் விழுதுகள்...
பூரண வெண் கதிரலைகள்,
பூரிப்பை உண்டாக்கும் அதிர்வலைகள்..
பிறைமதியில் பிள்ளைத் தமிழ்த் துளிர்வாள்...
நிறைமதியில் பாட்டன்கதைகள் பல ஒளிர்வாள்...
மேகத்திரை இவளை மூடினால்,
அனேகர்க்கு சோகத்திரை முகத்தை மூடும்...
பெண்குலத்தின் பேரழகி...
வெண்முகத்தின் ஓரழகி...
இளங்காதலர்க்கு இவளன்றி யார்தான் தூது...
இவளிடம் என்றுமில்லை சூதென்னும் வாது...
மதியழகை என்னென்று சொல்ல...
மதிமயக்கும் என்றாலது மிகையுமல்ல...
ஆதலினால் ஆழமாக அழுத்திச் சொல்வேன்...
நிலாக்காதலி நிஜமாக நானென்று!

6 comments:

Syam said...

oops I din't know that you are back to blogging...welcome back :-)

Syam said...

as usual wonderful kavithai :-)

Gayathri Chandrashekar said...

@Syam,
Thanx for yr comment!

Baby Pavan said...

அடடே நீங்க சேலம்மா....நல்லா இருக்கு உங்க கவிதை...

Gayathri Chandrashekar said...

aamaam...thangal varugaikku nanri pavan.

Prabhu Chinnappan said...

good one..nice usage of words. keep going