வானம்பாடி :
ஞானம் தேடிச் சென்றேன்...
கானம் ஒன்று கேட்டேன்.
எங்கோ வானில் மிதந்து வந்தது ...
தேனாய் இசைத்தது யார்?
உன்னை பற்றி சொல்லேன்?
என்று காற்றில் வினவினேன்
காற்றும் இனித்தது அதன் குரலில்!
நான் ஒரு சுதந்திர பறவை!
வானில் பறந்து கானம் படுவதால்,
என் பெயர் வானம்பாடி என்றது!
வானின் அத்தனை மாடங்களிலும் பாடுவேன்,
வசீகர இசையால் என் இணையைத் தேடுவேன்.
குயிலைப்போல நீயும் ஒரு பாடும் பறவையோ ?
இல்லை இல்லை என வேகமாய் மறுத்தது காற்று...
நான் குயிலைப்போல பொறுப்பற்றவன் அல்ல...
அனைத்து பறவைகளும் மரத்தில் கூடு கட்டிட,
நான் மட்டும் நிலத்தில் கூடு கட்டிடுவேன்!
வயல்களின் நடுவே, பெரிய மரத்தின் வேர்களுக்கிடையே,
என் கூட்டினை கண்டறிவது கடினம்...
அது என் சமயோஜிதம் .
கடவுள் எமக்களித்த வரத்தினால் ,
மூலிகை பல நானறிவேன்.
மலைகளிலும், மலைக் குகைகளிலும் தேடி ,
நான் நீலக்கொடிவேலி முதலிய
மூலிகை வேரிகளால் பின்னி கூடு கட்டுவேன்..
என் முட்டைகளை , குஞ்சுகளை ,
நஞ்சு கொண்ட கீறி, மற்றும் பாம்பிடமிருந்து காப்பேன்...
என பெருமையாய் சொன்னது!
இனிய துணை தேடி, அழகான இல்லறம் கண்டு,
பாசமான, பண்பான, இல்லாளையும், பிள்ளைகளையும்,
நாளும் அன்புடன் பேணி காப்பவன்,
எல்லா ஞானமும் பெறுவான் என்றது!
கானமும் கேட்டேன் !
ஞானமும் பெற்றேன் !
No comments:
Post a Comment