Wednesday, March 30, 2022

அக்னி குட்டி

அக்னீஸ்வரர் அருளால்,

எங்கள் அன்பில் உதித்தவன்!

நற்பண்புகள் உடையவன்!

சண்டையும் போடுவான்,

அன்பையும் பொழிவான் !

வெண்டைக்காய் பிரியன்!

உருளைக்கிழங்கின் ரசிகன்!

சோளக்கருதின்  அடிமை!

கடலைக்கு ஏங்கும் பித்தன்!

நெய்யும், பருப்பும், தயிரும்,

கொஞ்சம் சாதமும் இருந்தால்,

சந்தோஷம் இவனுக்கு!

குறும்புகள் பல செய்து,

அப்பாவிடம் அடி வாங்குவான்.

கோபம் வருகையில்,

நான் தான்  அகப்படுவேன்.

நானும் கோபம் கொண்டால்,

வாடும் இவன் பால் முகம்.

என்னை திசைதிருப்பி,

நகைச்சுவையாய் பேசி,

சிரிக்க வைப்பது   திறமை.

சுரபி அக்காவின் குட்டிக்  குறும்பன்.

யாராவது மிட்டாய் கொடுத்தால்,

அக்காவிற்கும் கேட்டு வாங்கும் சமர்த்தன்!

என்னைக் காட்டும் கண்ணாடியாய்,

நான் சிரித்தால் மகிழ்வான்.

நான் அழுதால் தானும் அழுவான்.

இவன் வெள்ளந்தி சிரிப்பில்,

மறக்கின்றேன் என் கவலைகளை.

இவனுடைய சிறிய உலகில்,

இவனது அன்பில் இளைப்பாற,

எனக்கு ஒரு அழகிய இடம்.

இது என் அக்னி குட்டியின்,

அருகாமை தரும் இதம்.









7 comments:

வெங்கட் நாகராஜ் said...

கவிதை நன்று. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

Gayathri Chandrashekar said...

நன்றி வெங்கட்ஜி

Anonymous said...

So true!! Beautiful!!

ashok said...

Wonderfully written

Gayathri Chandrashekar said...

Thank you Ashok!

SG said...

Excellent poem.

Gayathri Chandrashekar said...

Thank you!