Thursday, December 29, 2005

Nature

Nature is beautiful and mysterious in its own way. Nature's treasures are immeasurable. Sometimes it is mild and Sometimes it is wild as William Blake has said in his poem. I have written a poem blaming its wild nature. Nature seems to deliver the truth that there is a reason behind its wildness. You can find that truth in my poem below. 

மேகம்:

ரசனைக்குரியவனாய் மட்டுமே இருந்த நீ,

இப்பொழுது ஏன் ராட்சச மேகமாய்?

பூமாரி பொழிய தெரிந்த உனக்கு, 

புயல் மழையை தரவும் மனம் வந்ததேன் ? 

குறைகளை நீக்க தெரிந்த உனக்கு, 

கரைகளை உடைக்க தெரிந்ததெப்படி ?

 ரட்சிக்க வந்தாய் என நினைக்கையில்,

வஞ்சிக்க வந்தேன் என நனைத்தாய்.

உனக்கு தான் உருமாறி பழக்கமாயிற்றே, 

பின்"கருணை மேகம்" என்ற அடயமொழி எதற்கு? 

நீரின்றி அமையாது இவ்வுலகம் என்பர்,

நீரும்  சொல்லிக்கொள்ளலாம் , அமைவதும், அழிவதும் ,

நீரால்தான் என்று.

வெள்ளக்காடாய்கண்ணுக்கெட்டிய வரை காட்சியளிக்கையில் 

என் காதினில்  விழுந்தது  மாயமேகம் சிந்திய பலத்துளிகளில் ஒன்று.

விழுந்து ஓடாமல் உட்கார்ந்து, மெதுவாய் சொன்னது 

" ப்ரம்ம  ரகசியம்  ஒன்று ". 

இது வெறும் வெள்ளக்காடல்ல.

பரசிவ வெள்ளம். 

பற்றறுக்க வந்தது. 

சமத்துவம் உணர்த்த வந்தது. 

நிலையேதுமில்லையென  சடுதியில் வந்தது.

சில நிமிடம்  உறைந்து, பின் உணர்ந்தேன், 

சிவவெள்ளத்தில் ஜீவன்கள் எம்மாத்திரம்?.


Wednesday, December 28, 2005

Inspiration from Bharathi

Tamil poet Subramania Bharathi has inspired through his great poems. I have translated one of his poems which influenced me. Complete self-surrender to the Omnipresent is found in this poem. It is a sort of prayer to attain fulfillment getting rid of this mundane world.


கண்ணம்மா என் குலதெய்வம் : 
நின்னை சரணடைந்தேன்- 
கண்ணம்மா நின்னை சரணடைந்தேன்.
பொன்னை  , உயர்வை , புகழை விரும்பிடும்
என்னை கவலைகள் திண்ணத்தகாதென்று (நின்னை)
மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சிற் குடிமை புகுந்தன,
கொன்றவை போக்கென்று  (நின்னை)
தன்  செயல் எண்ணி  தவித்தது தீர்ந்திங்கு ,
நின் செயல் எண்ணி நிறைவு பெரும் வண்ணம் (நின்னை)
துன்ப மினியில்லை , சோர்வில்லை , தோற்ப்பில்லை ,
அன்பு நெறியில் அரண்கள் வளர்த்திட (நின்னை)
நல்லது தீயது நாமறியோ மன்னை 
நல்லதை நாட்டுக! தீயதை ஓட்டுக  (நின்னை)


Kannamma-My Goddess :
I surrender to You-kannamma I surrender to You. 
I stoop towards mean gold, greatness, and fame. 
To stop the agony from devouring me, 
I surrender to You-Kannamma I surrender to You.
My heart is smeared with fear and ignorance.
Crush their very root-To ask this, 
I surrender to You-Kannamma I surrender to You. 
Instead of grieving for my own deeds, 
I have come to follow your deeds for fulfillment. 
Thus I surrender to you-Kannamma I surrender to You. 
No sorrow, No tiredness, Never failure hereafter. 
To cultivate righteousness by pure love
I surrender to You-Kannamma I surrender to You. 
I know not what is good and what is not good -Mother goddess
Have to imbibe the best in us
And drive the worst from us. 
With this prayer without falling prey, 
I surrender to You-Kannamma I surrender to you.

Vaanampaadi

Hi Friends, I am new to this Blogspot. I have penned down my thoughts here. I am interested in reading poems written by Wordsworth, Shelley, Keats, and great Tamil poet Bharathi. I have some poems for u to relish... 

To Establish you: 
Polish your words,
Abolish your swords. 
Cherished be your seeds, 
Perished be poor weeds.
Never be peevish, 
Never be lavish.
Don't be another's behalf,
Don't be another's calf. 
Have some wit to laugh, 
Have to fit even in a half. 
Need to feed the needs,
Need to lead towards good deeds.

 I have written this poem when I missed my little Siddharth.

என்  கண்ணன் :  
கண்ணை கட்டி காட்டினில்  விட்டது போல் உணர்கையில்,
அங்கு கட்டவிழ்த்தும்  ஞானமாய்,
ஒளி மிளிரும் ஞாலமாய்,
கண் முன் நிற்பது யார்?
என் கண்ணனைய  கண்ணனன்றோ!
துக்கம் தொண்டை அடைத்து,
தூக்கம் கண் வர மறுகையில் ,
என் பக்கம் வந்தமர்ந்து பார்வையால் துயர் போக்கி,
துயில் கொள்ள செய்து,
மயில் இறகால் வருடுவது யார்?
என் பால் வண்ண கண்ணனன்றோ!
விதி என்னை விதிக்கையில்,
சதி என்னை எதிர்க்கையில்,
மதி என என்னுள் உறைந்து ,
கதி அருள்வார் யார்?
-என் யதுகுல மண்ணனன்றோ!
களைகளை களைவது யார்?
ஜீவனைக் கடைந்து, கரைப்பது யார்?
தீவினை உடைத்து அழிப்பது யார்?
-என் யசோதை இளம் சிங்கமன்றோ!
இலையில்  அவதரித்து , 
மலையை குடையாய் பிடித்து,
தன் வலையில் உயிர் பிடித்து ,
சிலையாய் என் முன் நிற்பது யார்?
என் பிள்ளைச் செல்வமன்றோ!
கறைகளை நீக்குபவன் யார்?
உயிர்க்கு கரை  என நிற்பவன் யார்?
உணர்வில் பிறை என வளர்பவன் யார்?
-என் துயர் தீர்க்கும் தோழனன்றோ!
மாயையில் மயக்கி- அனைத்தும் 
சாயை என உணர்த்தி, 
வாழ்க்கைக்  காயை நகர்த்தி,
என் தாயைப் போல் தயை புரிபவன் யார்?
-என் பேசும் தெய்வமன்றோ !