To Establish you:
Polish your words,
Abolish your swords.
Cherished be your seeds,
Perished be poor weeds.
Never be peevish,
Never be lavish.
Don't be another's behalf,
Don't be another's calf.
Have some wit to laugh,
Have to fit even in a half.
Need to feed the needs,
Need to lead towards good deeds.
I have written this poem when I missed my little Siddharth.
என் கண்ணன் :
கண்ணை கட்டி காட்டினில் விட்டது போல் உணர்கையில்,
அங்கு கட்டவிழ்த்தும் ஞானமாய்,
ஒளி மிளிரும் ஞாலமாய்,
கண் முன் நிற்பது யார்?
என் கண்ணனைய கண்ணனன்றோ!
துக்கம் தொண்டை அடைத்து,
தூக்கம் கண் வர மறுகையில் ,
என் பக்கம் வந்தமர்ந்து பார்வையால் துயர் போக்கி,
துயில் கொள்ள செய்து,
மயில் இறகால் வருடுவது யார்?
என் பால் வண்ண கண்ணனன்றோ!
விதி என்னை விதிக்கையில்,
சதி என்னை எதிர்க்கையில்,
மதி என என்னுள் உறைந்து ,
கதி அருள்வார் யார்?
-என் யதுகுல மண்ணனன்றோ!
களைகளை களைவது யார்?
ஜீவனைக் கடைந்து, கரைப்பது யார்?
தீவினை உடைத்து அழிப்பது யார்?
-என் யசோதை இளம் சிங்கமன்றோ!
இலையில் அவதரித்து ,
மலையை குடையாய் பிடித்து,
தன் வலையில் உயிர் பிடித்து ,
சிலையாய் என் முன் நிற்பது யார்?
என் பிள்ளைச் செல்வமன்றோ!
கறைகளை நீக்குபவன் யார்?
உயிர்க்கு கரை என நிற்பவன் யார்?
உணர்வில் பிறை என வளர்பவன் யார்?
-என் துயர் தீர்க்கும் தோழனன்றோ!
மாயையில் மயக்கி- அனைத்தும்
சாயை என உணர்த்தி,
வாழ்க்கைக் காயை நகர்த்தி,
என் தாயைப் போல் தயை புரிபவன் யார்?
-என் பேசும் தெய்வமன்றோ !
No comments:
Post a Comment