Nature is beautiful and mysterious in its own way. Nature's treasures are immeasurable. Sometimes it is mild and Sometimes it is wild as William Blake has said in his poem. I have written a poem blaming its wild nature. Nature seems to deliver the truth that there is a reason behind its wildness. You can find that truth in my poem below.
மேகம்:
ரசனைக்குரியவனாய் மட்டுமே இருந்த நீ,
இப்பொழுது ஏன் ராட்சச மேகமாய்?
பூமாரி பொழிய தெரிந்த உனக்கு,
புயல் மழையை தரவும் மனம் வந்ததேன் ?
குறைகளை நீக்க தெரிந்த உனக்கு,
கரைகளை உடைக்க தெரிந்ததெப்படி ?
ரட்சிக்க வந்தாய் என நினைக்கையில்,
வஞ்சிக்க வந்தேன் என நனைத்தாய்.
உனக்கு தான் உருமாறி பழக்கமாயிற்றே,
பின்"கருணை மேகம்" என்ற அடயமொழி எதற்கு?
நீரின்றி அமையாது இவ்வுலகம் என்பர்,
நீரும் சொல்லிக்கொள்ளலாம் , அமைவதும், அழிவதும் ,
நீரால்தான் என்று.
வெள்ளக்காடாய்கண்ணுக்கெட்டிய வரை காட்சியளிக்கையில்
என் காதினில் விழுந்தது மாயமேகம் சிந்திய பலத்துளிகளில் ஒன்று.
விழுந்து ஓடாமல் உட்கார்ந்து, மெதுவாய் சொன்னது
" ப்ரம்ம ரகசியம் ஒன்று ".
இது வெறும் வெள்ளக்காடல்ல.
பரசிவ வெள்ளம்.
பற்றறுக்க வந்தது.
சமத்துவம் உணர்த்த வந்தது.
நிலையேதுமில்லையென சடுதியில் வந்தது.
சில நிமிடம் உறைந்து, பின் உணர்ந்தேன்,
சிவவெள்ளத்தில் ஜீவன்கள் எம்மாத்திரம்?.
No comments:
Post a Comment