வழிப்போக்கன்
வாழ்வே ஒரு விருந்தாகும் வழிப்போக்கனுக்கு மட்டும்.
பசிக்கும் ருசிக்கும் அல்ல இவ்விருந்து.
பார்வைக்கு விருந்து, மனதிற்கு மருந்து.
நான்கு சுவர் வாசிகளுக்கு,
தன் வீடு,தன் வேலை,
தன் மனைவி,தன் பிள்ளை,
இது மட்டுமே விளங்கும்.
வழிப்போக்கனுக்கோ, அனைத்தும் சொந்தம்.
ஆனால்அவனில்லைஎதற்கும்சொந்தம்.
மாளிகைகள்,கோபுரங்கள்,குடில்கள்,குடிசைகள்,
பூங்காக்கள்,பொதுசாலைகள்,திருவிழாக்கள்,தேசாந்திரங்கள்,
இவைகளில் பதியும் இவன் பாதங்கள்,
எங்கும் பதியன் போட்டு நிற்பதில்லை.
வெய்யில் இவனுக்கு கொடையாகும்.
மழை இவனுக்கு போர்வையாகும்
சித்திர விசித்திர மேகங்களும் சலித்து சொல்லி நடை காட்டும்,
இவன் பின்னால் நடக்க இயலவில்லையென.
இவன் கூடு வாழும் பறவையல்ல.
அனைத்துள்ளும் கூடி வாழ்பவன்.
இவன் வானம்பாடியின் வம்சத்தில் வந்தவன்.
மேகத்தை போல ,நதியை போல,
காற்றை போல, காலத்தை போல,
ஓடுவதே வாழ்வின் சாரம் என கற்பிக்க வந்த கலைஞனிவன்!
நெருப்பில் கரையும் பஞ்சென,
பணம்,பெயர்,புகழ் இவற்றில் அனைவரும் கரைகையில் ,
இவன் மட்டும் கரையேறுகின்றான் .
சூரியனாலும் கரைக்க முடியா மேகப்பஞ்சிவன்.
அஞ்சிப்பழகா இவனை யாரென்று கேட்டால்,
சொல்லாமல் சொல்லுவான் "நானும் ஓர் சிவன்",
சுகதுக்கங்களில் சுகிக்காத "இன்னுமோர் ஜீவன் "
1 comment:
Good to see u unleash ur poetry skills..where better can u showcase ur masterpieces..its off to a good start..I will be watching out for ur posts..keep the world entertained with ur literary skills..
Post a Comment