Kannaadi 
நீ  உண்மையை  பிரதிபலிப்பதாய், 
அனைவரும் சொல்கின்றனர்.
முகத்தை பிரதிபலிக்கும் நீ,
ஏன் அகத்தை மறைக்கின்றாய்?
அகத்தின் வெளிப்பாடாக ,
சிலர்க்கு  மட்டுமே முகம்.
வேறு சிலர்க்கோ ,
அகத்தை மறைக்க மட்டுமே முகம்.
ஒப்புக்கொள்  கர்வக்கண்ணாடியே,
நீயும் பொய்மையை தான் பிரதிபலிக்கின்றாய்.
சில சமயங்களில், சிலரின்  முகம் போல...
 
 
1 comment:
Really Nice poem.I liked it very much.
Post a Comment